Counting the Dead- ATC Assisting in collecting data in Australia

As we approach the tenth year since the war in the island of Sri Lanka came to a bloody end, there still exist discrepancies as to number of dead. The Australian Tamil Congress (ATC) will be assisting in a project launched by two international NGO’s, the International Truth and Justice Project (ITJP) and the Human Rights Data Analysis Group (HRDAG), which aims to estimate the number of dead and disappeared. 
 
Volunteers from ATC will assist those wishing to provide the relevant information required to record the deceased or disappeared due to war, and coordinate the project in Australia. Names and details will be collected over the next three months with the aim to have a collated list by May 2019. ITJP and HRDAG have assured confidentiality in the collection process. 
 
ATC will also engage in protecting the privacy of those involved. We urge those who wish to volunteer for this project, or those with details of anyone who has deceased or disappeared in the island of Sri Lanka due to the war, including as far back as 1983, to contact us via email on This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. or call us on 1300 660 629.

 
 
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனஅழிப்பு முடிவுற்று பத்து ஆண்டுகளை எட்டுகின்ற போதிலும், படுகொலைசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றுவரை உறுதிப்படுத்தப்படாமலேயே உள்ளது. இத்தகைய பின்னணியில், படுகொலைசெய்யப்பட்டவர்களினதும், பலவந்தமாக காணமற்போகற்செய்யப்பட்டவர்களினதும் எண்ணிக்கையை அறியும் முகமாக, உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டமும் (The International Truth and Justice Project) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக் குழுமமும் (Human Rights Data Analysis Group) இணைந்து மேற்கொள்ளும் செயற்திட்டத்திற்கு அவுஸ்ரேலியத் தமிழர் பேரவை உதவிகளை வழங்கவுள்ளது. 
 
படுகொலைசெய்யப்பட்ட மற்றும் பலவந்தமாக காணமற்போகச்செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை பதிவுசெய்ய விரும்புவர்களுக்கு அவுஸ்ரேலியத் தமிழர் பேரவையைச் சார்ந்த தொண்டர்கள் உதவிபுரிவதோடு, இந்த செயற்திட்டத்தையும் அவுஸ்ரேலியாவில் ஒருங்கிணைக்கவுள்ளனர். சேகரிக்கப்படும் தரவுகளும் தகவல்களும் ஒன்றுதிரட்டப்பட்டு மே 2019 ல் ஒரு பட்டியலை பெற்றுக்கொள்ளும் நோக்கில், பெயர்களும் தொடர்புபட்ட தகவல்களும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு  சேகரிக்கப்படும். சேகரிப்பு முறையில் இரகசியத்தன்மை பேணப்படும் என்பதற்கு உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டமும், மனித உரிமைகள் தரவு ஆய்வுக் குழுமமும் உத்தரவாதம் வழங்கியுள்ளன. இந்த செயற்திட்டத்தில் ஈடுபடுபவர்களின் இரகசியத்தன்மையை அவுஸ்ரேலியத் தமிழர் பேரவையும் பேணிப் பாதுகாக்கும். 
 
இந்த செயற்திட்டத்தில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களும், இலங்கைத் தீவில் 1983 ம் ஆண்டிலிருந்து போரினால் மரணமடைந்தவர்கள் மற்றும் காணமற்போனவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க விரும்புபவர்களும் கீழ்வரும் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி இலக்கத்தின் ஊடாக எம்மைத் தொடர்புகொள்ளவும் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. / 1300 660 629
 
7 January 2019